Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி தர தமிழக அரசு முடிவு...

 நடப்பு கல்வி ஆண்டில், இலவச மற்றும்கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ்,தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக,தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு
தர வேண்டிய, 25 கோடி ரூபாய் நிலுவைதொகையை, தமிழக அரசே வழங்க முடிவுசெய்து உள்ளது.



தனியார் பள்ளிகள்:

ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், தனியார்பள்ளிகள், ஆரம்ப நிலை வகுப்பில்(எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு) உள்ளமொத்த இடங்களில், 25 சதவீதத்தை, ஏழைஎளிய சமுதாயத்தில், நலிந்த பிரிவினரின்குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். நடப்புகல்வியாண்டுக்கான (2014 - 15) மாணவர்சேர்க்கை, மும்முரமாக நடந்து வரும்நிலையில், ஆர்.டி.இ., பிரிவு மாணவர்சேர்க்கை மட்டும், எங்கும் நடக்கவில்லை.தனியார் பள்ளிகள், இட ஒதுக்கீட்டுவிண்ணப்பம் வழங்கவே மறுத்து வருகின்றன.இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், கடந்த கல்விஆண்டில் சேர்ந்த குழந்தைகளுக்கான கல்விகட்டணத்தை, தமிழக அரசு, இதுவரைவழங்கவில்லை. இந்த நிதியை, மத்திய அரசுவழங்க வேண்டும் என்பதால், தமிழக அரசுமவுனமாக இருந்து வந்தது. இந்த நிலையில்,தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில்,மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்,சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்திற்குப் பின், சங்க பொதுச் செயலர்நந்தகுமார், நிருபர்களிடம் கூறுகையில், ''நிலுவைத் தொகையை வழங்க, மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே, நடப்புகல்வியாண்டில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டைஅமல்படுத்த மாட்டோம்,'' என்றார். தனியார்பள்ளிகளின் இந்த அதிரடி முடிவால்,ஆர்.டி.இ., பிரிவின் கீழ் நடக்கும் மாணவர்சேர்க்கையில், திடீர் முட்டுக்கட்டைஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை குறித்து, கல்வித்துறைவட்டாரம் கூறியதாவது: முதல் முறையாக,கடந்த கல்வியாண்டில், ஆர்.டி.இ., இடஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் மாணவர்கள்,தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்குசெலவான, 25 கோடி ரூபாயை, மத்திய அரசுவழங்க வேண்டும். ஆனால், மத்திய அரசுவழங்காமல், காலதாமதம் செய்து வருகிறது.

இட ஒதுக்கீடு:


இனி, புதிய அரசு வந்து தான் வழங்க வேண்டிஇருக்கும். அதற்கு, மேலும் சில மாதங்கள்ஆகிவிடும். இதனால், இட ஒதுக்கீட்டின் கீழ்மாணவர் சேர்க்கை நடப்பது நின்றுவிடக்கூடாது என்பதற்காக, தமிழக அரசே, 25கோடி ரூபாயை வழங்க முடிவு செய்துள்ளது.பின்னர், இத்தொகை, மத்திய அரசிடமிருந்துகேட்டு வாங்கப்படும். இந்த தொகை,விரைவில், தனியார் பள்ளிகளுக்குவழங்கப்படும். எனவே, எந்த பிரச்னையும்இல்லாமல், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ்,நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைநடக்க, அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறைவட்டாரம் தெரிவித்தது.

Ad Code

Responsive Advertisement