தொழில் நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டின் முதலாம் ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 24ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை கோயம்புத்தூர் தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெறுகிறது.
மே 24ம் தேதி டெக்ஸ்டைல் டெக்னாலஜி (ஜவுளித்துறை) மற்றும் சிவில் இஞ்சினியரிங் (கட்டிடவியல்),
மே 25ம் தேதி மெக்கானிக்கல் இஞ்சினியரிங் (இயந்திரவியல்)
மே 26ம் தேதி எலக்டிரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / கணிணி (EEE / ECE / CSE) ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறவில்லையெனினும் தகுதியுள்ள மாணவர்களும் மேற்கூரிய தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களை www.tn-dte-ptbe.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை