Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மே. 14ல் விநியோகம்

ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மே. 14ம் தேதி முதல் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) முத்துரெங்கன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை 2014- 2015ம் கல்வி ஆண்டிற்கு, ஒற்றைச் சாளர முறை சேர்க்கை விண்ணப்பங்கள் மே. 14ம் தேதி முதல் ஜுன். 2ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பிரிவு மாணவ, மாணவிகள் ரூ. 500ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் ரூ. 250ம் அளித்து விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர். 

Ad Code

Responsive Advertisement