Ad Code

Responsive Advertisement

12ஆம் வகுப்பு தேர்வு: மறுகூட்டலுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

சென்னை: 12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் இன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 14ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.  எனவே, விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 5 நாட்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் எவ்வித அவசரமுமின்றி விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். 

Ad Code

Responsive Advertisement