எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி பகிரா பானு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 19 பேரில் ஒருவர் மட்டுமே மாணவர். பத்தமடையை சேர்ந்த மாணவர் மகேஷ் மட்டுமே 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாளை ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் ராம்விக்னேஷ் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–ம் இடத்தை பெற்றுள்ளார். தர்மபுரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த காவியா, கவிதா, தீப்தி, கிருத்திகா, ரேவதி, மைவிழி, ஸ்ரீவந்தனா, கயல்விழி உள்பட, 10 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சென்னை மாணவர்கள் முதலிடம் பிடிக்கவில்லை. முதல் இடம் பிடித்த மாணவர்கள் அனைவரும் சென்னையை தாண்டிய மற்ற மாவட்டத்தினர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை