Ad Code

Responsive Advertisement

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: ஜூன் 10 கடைசி நாள்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இலவச பயிற்சிக்குவிண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


இந்தப் பயிற்சி வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து தொடங்கி, 11மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்காக தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம் (பொது), பொது அறிவு,சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினி போன்றவற்றில் பயிற்சிகள்அளிக்கப்படும்.

இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.500 உதவி தொகையாகஅளிக்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இலவசமாகஅளிக்கப்படும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுமையம், இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிஇயக்குநரகத்தின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டடம், 3-ஆவது தளம், எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600004,தொலைபேசி: 044-24615112 என்னும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள்விநியோகிக்கப்படும். மே 26 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை, இந்தமையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான நேர்காணல் ஜூன் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிள் நடைபெறும் என்று பயிற்சி மற்றும்வழிகாட்டு மையத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement