Ad Code

Responsive Advertisement

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Dinamalar Tea Kadai Bench...

''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''என்ன ஓய் சொல்ல வர்றீர்... என்ன பிரச்னை...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்... உடனே அவன், அந்த ஆசிரியையை, 'பளார்'ன்னு கன்னத்துல அறைஞ்சுட்டான்...
''நிலைகுலைந்த ஆசிரியை, இனி பணி செய்ய முடியாதுன்னு சொல்லி, ராஜினாமா லெட்டர் குடுத்தாங்க... ஆனால், அவரை பள்ளி நிர்வாகம் சமாதானம் செஞ்சுச்சு... இப்ப அந்த மாணவன் என்ன செய்யிறான் தெரியுமா... பேஸ்புக், மின்னஞ்சல்களில், பள்ளி நிர்வாகத்தைப் பத்தி, கடுமையா விமர்சிச்சிட்டிருக்கான்...
''அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அந்த தகவல்களை சேகரித்து வருவதோடு, நடப்பாண்டு முதல், மேல்நிலை வகுப்பு, மாணவர்களையே சேர்க்கக் கூடாதுன்னும், மாணவியருக்கு மட்டும், 'அட்மிஷன்' குடுக்கலாம்ன்னும் முடிவு செஞ்சிடிச்சு... இது போல, மாணவர்கள் நடந்துக்கிட்டாங்கன்னா, மத்த பள்ளிகளும், மாணவர்களைச் சேர்க்க, தயங்குமேங்க...'' என்று 
கூறியபடி, கவலை தோய்ந்த முகத்துடன், கிளம்பினார் அந்தோணிசாமி.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!

Ad Code

Responsive Advertisement