Ad Code

Responsive Advertisement

ஓட்டுச்சாவடிக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை

திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ கூறியதாவது:
ஏப்ரல், 24ம் தேதி காலை, 7 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை, 6 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில், 2,319 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், 11 ஆயிரத்து, 410 அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுவர். முதல்கட்டமாக, 3, 5ம் தேதிகளில் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. 2ம் கட்டமாக, 9 சட்டசபை தொகுதிகளிலும் பயிற்சி நடக்கிறது. இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவுக்கு முதல் நாளான, 23ம் தேதி அளிக்கப்படுகிறது.
ஓட்டுப்பதிவு முடிந்த பின், பதிவான மொத்த ஓட்டு எண்ணிக்கையை படிவம், 17 சியில் தயாரித்து அதன் நகல்களை ஓட்டுச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும். தேர்தலின்போது, ஓட்டுச்சாவடிக்குள் ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு நபர்கள், ஆண், பெண் என மாறி, மாறி ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு வாக்களிக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement