Ad Code

Responsive Advertisement

மறக்க முடியாத மாணவர்கள்: திருமதி.சித்ரா குமரேசன் அவர்கள் உரை, இன்றைய சுட்டி விகடனின் தொலைபேசியில்! மறக்காம கேளுங்க ஆசிரிய நண்பர்களே!!

மறக்க முடியாத மாணவர்கள்: திருமதி.சித்ரா குமரேசன் அவர்கள் உரை, இன்றைய சுட்டி விகடனின் தொலைபேசியில்! மறக்காம கேளுங்க ஆசிரிய நண்பர்களே!!


அன்பு மிக்க ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்!

சுட்டி விகடன் இதழ் வழங்கும் மறக்க முடியாத மாணவர்கள் என்னும் தலைப்பிலான தொலைபேசி வழி பகிர்வில் இன்று (18.04.2014) 17,அஸ்தினாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் பற்றி...

1.மாணவர்களுக்கு கற்பித்தலுடன் தனது பணி முடிந்தது என கருதுபவர் அல்ல. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுபவர்.மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதையை விதைப்பவர்.

2.இவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இவரின் மாணவர்கள், கணினிவழிக் கற்பித்தலுக்கேற்ற வகையில் பாடப் பொருளை வடிவமைத்ததுடன், ஆசிரியர்களுக்கு கருத்தாளர்களாக செயல்பட்டுள்ளனர். இவரின் இந்த சாதனைக்காக இந்திய குடியரசு தலைவர் மேதகு.பிரணாப் முகர்ஜி இவருக்கு ஐ.சி.டி. ICT தேசிய விருது வழங்கி பெருமை படுத்தியுள்ளார்.

3.கணினியை திறம்பட கற்பித்தலுக்கு பயன் படுத்தியதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் சிறந்த ஆசிரியர் என்ற விருதை அளித்து,இவருக்கு வாஷிங்டனில் நடைபெற்ற அகில உலக கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள அழைத்து இவரது திறமையை பாராட்டியுள்ளது.

4.சூரிய ஒளி ஆற்றலை எந்தெந்த வழிகளில் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தலாம் என்ற தலைப்பின் கீழ் இவரது வழிகாட்டுதலின் படி செயல் பட்ட இவரது மாணவர்கள் தேசிய அளவிலான விருதை Design for Change – காக அகமதாபாத்தில் பெற்றனர்.

5.தமிழக அரசின் 3,4, 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தக ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்.

6.மாணவர்களை மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பவர். ஆசிரியர்களின் படைப்பு திறனை வெளிக்கொணர வழிகாட்டுவதுடன், அவர்களின் சிறந்த படைப்புகளை தனது இணைய தளத்தில்http://teachmicroinnovative.wikispaces.com/ வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறார். ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை இவரின் மின்னஞ்சலுக்கு chitra71pums@rediffmail.com அனுப்பினால் அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட ஆர்வமாக உள்ளார்.

7.இவரிடம் பயின்ற மாணவர்கள், இன்று அரசின் பொறுப்பான பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

இவரின் உரையை கேளுங்கள்! பயன் பெறுங்கள்!!

இவரின் உரையை கேட்க 044-66802905 என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்.

உரையின் கால அளவு: 3 நிமிடங்கள்.(Depression – என்பது நோயல்ல )

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement