Ad Code

Responsive Advertisement

இந்திய மாணவர்களின் நிலை எப்படி? - விவரிக்கும் ஆய்வு

இந்திய மாணவர்கள், இன்னும் தங்கள் தாய்நாட்டின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Youth Economics: Career Expectations Survey என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை முடித்த, டில்லியின் 84% மாணவர்கள், தங்களின் பணி வாய்ப்புகளை சிறப்பாக்கிக் கொள்ள, இந்தியாவில் தொடர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர். வெறும் 16% பேர் மட்டுமே, பணியின் பொருட்டு வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர்.
உயர்கல்வியை தொடர்ந்து மேற்கொள்வதற்கான பொருளாதார சிக்கல்கள், அதிகரிக்கும் விலைவாசி மற்றும் குறைவான வேலை வாய்ப்புகள் ஆகிய சிக்கல்களை, இந்திய மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மொத்தம் 29% மாணவர்கள் மட்டுமே, இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை நிறைவுசெய்த பின்னர், மேற்படிப்பை மேற்கொள்ள நினைப்பவர்களாக இருக்கிறார்கள். மொத்தம் 55% மாணவர்கள், கூடிய விரைவில் ஒரு நல்ல பணியைப் பெற்று, அதன்மூலம் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றனர்.
தனியார் துறை பணிகள், அரசுத்துறை பணிகளோடு ஒப்பிடுகையில், பணி பாதுகாப்பு, சலுகைகள், நீடித்த தன்மை மற்றும் நிம்மதி ஆகிய விஷயங்களில் மிகவும் பின்தங்கியுள்ளன.
ஆனால், அதேசமயம், அதிக சம்பளம், எளிதான பதவி உயர்வு மற்றும் பணி சவால்கள் ஆகிய விஷயங்களில், அரசுப் பணிகளைவிட, தனியார் துறை பணிகள் அதிகம் மேம்பட்டு திகழ்கின்றன.
இந்த ஆய்வின் மூலம் தெரியவந்த சில முக்கிய தகவல்கள்
73% மாணவர்கள், பொருளாதார ரீதியாக தங்களின் பெற்றோரை சார்ந்துள்ளனர்.
19% மாணவர்கள், உதவித்தொகை திட்டங்களை சார்ந்துள்ளனர்.
8% மாணவர்கள், தங்களின் குடும்ப வணிகத்தை சார்ந்துள்ளனர்.
16% மாணவர்கள், தங்களின் அன்றாட கைச் செலவுகளுக்காக கடன் வாங்குகிறார்கள்.
3% மாணவர்கள், உணவு, உடை, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை தொடர்பாக, தங்களின் செலவினங்களை 35% வரை குறைத்துக் கொள்கிறார்கள்.
14% மாணவர்கள், பகுதிநேர பணி மற்றும் டியூஷன் ஆகியவற்றை தேர்வு செய்கிறார்கள்.
12% மாணவர்கள், தங்களின் முந்தைய சேமிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
5% மாணவர்கள், தாங்கள் பணவீக்கத்தின் எந்த பாதிப்பையும் உணரவில்லை என்று தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement