Ad Code

Responsive Advertisement

தபால் ஓட்டு போடாதவர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை

தபால் ஓட்டு போடாதவர்கள் மற்றும் செல்லாத ஓட்டு போடுபவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்எனதேர்தல் கமிஷனில்
மனு கொடுக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம்பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட,சென்னவராயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரசேனன் என்பவர்தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின், 39லோக்சபா தொகுதிகளில்இம்மாதம் 24ல்,ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 2.68 கோடி ஆண்கள், 2.68 கோடி பெண்கள், 2,996திருநங்கைகள் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 60 ஆயிரத்து 418ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சீட்டு முறை ரத்து செய்யப்பட்டு,இயந்திரம் மூலம் ஓட்டளிக்கும் முறை வந்த பிறகுசெல்லாத ஓட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு மையங்களில் பணிபுரியும்,லட்சக்கணக்கான அலுவலர்கள் போலீசார் மற்றும் ராணுவத்தினர்தபால் மூலம் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் செலவுதபால் ஓட்டு தயாரித்தல் போன்றவற்றிற்காகதேர்தல் கமிஷன் பல கோடி ரூபாயை செலவிடுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர்படிவம் 12ஐ பூர்த்தி செய்துதேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்துதபால் ஓட்டைப் பெற்றுஅதை பூர்த்தி செய்து ஓட்டளிக்க வேண்டும். இப்பணியை முறையாக செய்யாதவர்கள்செல்லாத ஓட்டு பதிவு செய்பவர்களுக்கு எதிராகதேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில்,ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை,தபால் ஓட்டுகள் தான் நிர்ணயம் செய்கின்றன. இவ்வாறுமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement