Ad Code

Responsive Advertisement

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியருக்கு அடிப்படை வசதிகள் இல்லை என புகார்:கவனிக்குமா தேர்தல் ஆணையம்?

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு, குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்தத் தேர்தலி லாவது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தேர்தலுக்கு முந்தைய நாள், வாக்குப்பதிவுக்கான உபகரணங் களை மண்டல அதிகாரி கொண்டு வரும்வரை இரவு எவ்வளவு நேரமானாலும் வாக்குச்சாவடி யிலேயே காத்திருக்க வேண்டும். தேர்தல் நாளன்று அதிகாலை 5.30 மணிக்கே தயாராக இருக்க வேண்டும் என்பதால், பல ஊழியர்கள் வாக்குச்சாவடி யிலேயே தங்கும் நிலை ஏற்படும். தேர்தல் நாளன்று ஏஜென்ட்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 வரை 11 மணி நேரம் இடைவிடாமல் வாக்குப்பதிவு நடக்கும்.

வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர் களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்று பல ஆண்டுகளாக புகார்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக உணவு, குடிநீர், கழிப்பிட வசதி இருப்பதில்லை என்கின்றனர். இது குறித்து பலமுறை தேர்தல் பணி களில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் கூறும்போது, “பொதுவாக பள்ளி களில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். கோடை விடு முறையில் கழிப்பறைகள் பரா மரிக்கப்படுவதில்லை. அந்த நேரத் தில்தான் தேர்தல் நடத்தப்படு கிறது. கழிப்பறையை பயன்படுத் தாமல், எப்படி 11 மணி நேரம் வேலை பார்க்க முடியும்? வாக்குச் சாவடியை விட்டு வெளியே வரக் கூடாது. அதனால் கடைகள் எங் குள்ளன, உணவு எங்கு கிடைக் கும் என்றுகூட தெரியாது. எங்களுக் கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தந்தால் சந்தோஷ மாக வேலை பார்ப்போம்” என்றார்.
பெண் ஊழியர் ஒருவர், தான் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றி கூறுகையில், “நாற்பது வயதை தாண்டிய பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருக்கும். அதைக்கூட கருத்தில் கொள்வ தில்லை. கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. கடந்த தேர்தலின்போது பணிகள் முடிந்து வீடு திரும்ப எந்த போக்குவரத்து வசதியும் செய்து தரவில்லை. எனது கணவர் வந்து என்னை அழைத்துச் சென்றார். எனது நண்பருக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்து சில மாதங்களே ஆகியுள்ளன. அவரையும் கட்டாயமாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்” என்றார்.
இந்தத் தேர்தலின்போது வாக் குச்சாவடி அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் உட்புற பகுதி களில் இருக்கும் வாக்குச்சாவடி களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார். மேலும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் கூறுகையில், “இது கடினமான வேலை என்று புரிகிறது. அதனால் பள்ளிகளில் இந்த முறை குடிநீர், கழிப்பறை வசதிகளை உறுதிப்படுத்தி உள் ளோம்.
அதை பராமரிக்கவும் ஆட் கள் நியமித்துள்ளோம். உணவு, போக்குவரத்து வசதி வேண்டுமா னால் அதை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement