Ad Code

Responsive Advertisement

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு.


ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தைஓட்டுச்சாவடி அலுவலர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது,
'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கும், இம்மாதம் 24ல், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், தேர்தல் பார்வையாளர் மட்டும் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்; கலெக்டர் கூட, மொபைல் போன் எடுத்து செல்ல முடியாது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement