Ad Code

Responsive Advertisement

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அமைவிட அலுவலர்களுக்கு 2013-2014 க்கான உழைப்பூதியம்:


BLO எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தலா ரூ.3000 வீதமும் DLOஎனப்படும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களான தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.250 வீதமும் 2013-2014 ஆம்
ஆண்டுக்கான உழைப்பூதியமாக ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

DLOக்கள் வாக்குச்சாவடி(கள்) உள்ள பள்ளியிலேயே இருந்துகொண்டு முகாம் நாட்களிலும் சிறப்பு முகாம் நாட்களிலும் வாக்காளர்களுக்கு சேர்க்கை நீக்கல் திருத்தம் போன்றவற்றுக்கான படிவங்களை வழங்கிபூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்றுசரிபார்த்துபாகம் வாரியாகத் தொகுத்து வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்புள்ள பணியாளர்கள். ஒரு பள்ளியில் நான்கு சாவடிகள் இருந்தாலும் ஒரே DLOதான் இப்பணிக்காக நியமிக்கப்படுகிறார். இதுதவிர மாவட்ட ஆட்சியர்தேர்தல் வட்டாட்சியர் போன்றோர் நடத்தும் கூட்டங்களுக்கும் அவ்வப்போது சென்று வருகிறார். வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியையும் இவர் நடத்த வேண்டும்.
வருடத்தில் குறைந்தது பதினைந்து வேலை நாட்களும் ஐந்து விடுமுறை நாட்களும் முழுமையாகத் தேர்தல் பணிக்காகச் செலவிடும் DLOக்களுக்கான ஒருவருட மதிப்பூதியம் ரூ.250 மட்டுமே.

BLOக்கள் முகாம் நாட்களன்று சாவடியில் இருந்து அவருக்கான பாகத்திற்குரிய வாக்காளர்களுக்கும் DLOவுக்கும் உதவுதல்,பேரணி நடத்துதல்பெறப்படும் படிவங்களைக் களத்தில் சென்று ஆய்வு செய்து பரிந்துரைத்தல்சிறப்பு சுருக்கமுறைத் திருத்தங்களின் போது வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைச் சரிசெய்தல்தேர்தல் சமயத்தில் வீடு வீடாகச் சென்று பூத் ஸ்லிப் கொடுத்தல்தேர்தல் நாளன்று முழுவதும் சாவடியிலேயே இருந்து விடுபட்ட வாக்காளர்களுக்கு வழங்குதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.

இந்நிலையில் இப்பணிகளுக்குகுறிப்பாகDLOக்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.250 என்ற தொகையை ஊதியமாகக் கொடுப்பது தலைமையாசிரியர்களுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement