Ad Code

Responsive Advertisement

பாட புத்தகங்கள் வழங்கும் நிதியில் முறைகேடு:பள்ளி தலைமையாசிரியர்கள் தவிப்பு

பாடப்புத்தகங்கள் எடுத்து செல்ல அரசு ஒதுக்கீடு நிதி பள்ளிகளுக்கு வழங்காததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு இலவச பாட புத்தகம், நோட்டு வழங்குகிறது. 
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாட புத்தகங்கள் தபால் துறை மூலம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதால், உதவிக்கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கே நேரடியாக புத்தகம், நோட்டு வழங்கிட அரசுஉத்தரவிட்டு அதற்கான நிதியும் வழங்கியது.ஒவ்வொரு உதவி கல்வி அலுவலகத்தில் உள்ள பள்ளிகளில் 7 முதல் 12 பள்ளிகள் ஒருங்கிணைந்து 'ரூட்' தயார் செய்தனர். ஒரு ரூட் க்கு பாட புத்தகம், நோட்டு எடுத்து செல்ல ரூ. 2,500 வீதம் ஒதுக்கீடு செய்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 50 ஊராட்சி ஒன்றிய, ஆரம்ப, நடுநிலைப்பளிகள் உள்ளன. இதில் 16 உதவி கல்வி அலுவலகங்கள், 32 உதவி கல்வி அலுவலர்கள்பணியாற்றுகின்றனர். உதவி கல்வி அலுவலர்கள் பலர் அரசின் விதிப்படி பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கின்றனர்.

புலம்பல்

நிலக்கோட்டை உதவி கல்வி அலுவலகத்தில் உள்ள 111 பள்ளிகளுக்கு முதல் பருவத்திற்கான பாட புத்தகங்களை நிலக்கோட்டையில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று கொள்ள கூறினர். இதனால் கடந்த பருவத்திற்கான புத்தகங்களை மிகுந்த சிரமத்துடன் தலைமை ஆசிரியர்கள் எடுத்து சென்றனர். இதற்கான அரசு ஒதுக்கிய தொகை இதுவரை பள்ளிகளுக்கு வழங்க வில்லை என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர். இத் தொகை குறித்து கேட்டால் உதவி கல்வி அலுவலகத்திற்கு டேபிள், சேர், பர்னிச்சர் வாங்க வேண்டியுள்ளது என்று பதிலளிக்கின்றனர். இதனால் உதவிக்கல்வி அலுவலர்களை பகைத்து கொள்ள விரும்பாத தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.

தவணை முறையில் வழங்கல்

இது குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கையில், '' அரசு வழங்கும் பாட புத்தகம், நோட்டு, சீருடை, செருப்பு, கிரையான்ஸ், போன்ற இலவச பொருட்கள் ஒரே நேரத்தில் வழங்குவதில்லை. இ்ந்த பருவத்திற்கு 1முதல் 5 ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் வந்துள்ளது. 6,7 மற்றும் 8 ம் வகுப்பிற்கான புத்தகங்கள் சில வரவில்லை.நோட்டுகள் இரண்டு வகை வரவில்லை. பொருட்களையும் அரசு மொத்தமாக வழங்காமல் தவணையாக கொடுப்பதால் எப்படி பள்ளிகளுக்கு சப்ளை செய்ய முடியும். அதுவும் அரசு ஒதுக்கியுள்ள நிதி குறைவாக உள்ளது. லோடுமேன் கூலி நபருக்கு ரூ.600 ஆகும். 3 லோடுமேன்கள் கூலியாக சில ஆயிரம் செலவாகிறது. இதற்கு அரசு தனியாக நிதி வழங்குவதில்லை என புலம்புகின்றனர்.

தவறு நடக்கவில்லை

நிலக்கோட்டை உதவிக்கல்வி அலுவலர் விஜயா கூறுகையில்: பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கே அனுப்பி வருகிறோம். ஒருசில புத்தகங்கள் வரவேண்டியுள்ளதால் அனுப்பாமல் உள்ளோம். சில தலைமை ஆசிரியர்கள் வெளியூர் சென்றுள்ளதால் விடுபட்டவர்கள் பெற்று செல்கின்றனர். கடந்த பருவத்தில் நான் இங்கு இல்லை. தவறு நடக்கவில்லை.நிதி பள்ளிகளுக்கே வழங்கி விடுகிறோம, என்றார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement