Ad Code

Responsive Advertisement

தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி 40000ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் தமிழக அரசு..

தமிழக புதியபாடத்திட்டத்தில் அமெரிக்க,ஜெர்மனி தொழில்நுட்பக்கல்வி 40000ஆயிரம்..


தமிழக புதிய பாடத்திட்டத்தில், அமெரிக்க,ஜெர்மனியின்தொழில்நுட்ப கல்வியைசேர்க்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத,பிளஸ்1, பிளஸ் 2 பாடத்திட்டம்உட்பட, அனைத்துவகுப்புகளின்பாடத்திட்டத்தையும் மாற்ற,அமைச்சர்செங்கோட்டையன்உத்தரவிட்டுள்ளார்.


மதிப்புமிகு செயலர்உதயசந்திரன்மேற்பார்வையில், உயர்மட்டமற்றும் கலைத்திட்டகுழுக்கள் அமைத்து,பாடத்திட்டத்தைபுதுமைப்படுத்தும் பணிதுவங்கி உள்ளது.இதற்காக, அண்ணாபல்கலைக்கழகத்தின்முன்னாள் துணைவேந்தர்,அனந்த கிருஷ்ணன்தலைமையில், மாநிலகல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனஇயக்குனர்,அறிவொளியைஒருங்கிணைப்பாளராகநியமித்து, பாடத்திட்டபணிகள் நடந்துவருகின்றன


மாநிலம் முழுவதும்,கல்வியாளர்கள், சமூகஆர்வலர்களிடம் கருத்துகேட்பு கூட்டம், ஆலோசனைநிகழ்ச்சிகள்நடத்தப்படுகின்றன. பள்ளிஆசிரியர்கள்,மாணவர்களின்கருத்துக்களை பெற,பள்ளிகளில் கருத்தறியும்பெட்டிவைக்கப்பட்டுள்ளது.பாடத்திட்ட மாற்றத்திற்காக, புதியஇணையதளமும்விரைவில் துவங்கப்படஉள்ளது.இந்நிலையில்,புதிய பாடத்திட்டம் குறித்து,சர்வதேச, தேசியஅளவிலான பல்வேறுபாடத்திட்டங்கள் ஆய்வுசெய்யப்பட்டுள்ளன.அவற்றில் உள்ள முக்கியஅம்சங்கள்தொகுக்கப்பட்டு, புதியபாடத்திட்டங்கள் விரைவில்சேர்க்கப்பட உள்ளன.

இதில், அமெரிக்கா,ஜெர்மனி நாடுகளின்,தொழில்நுட்ப கல்வியைஇடம்பெற வைக்கலாம் என,கல்விக் குழுவினர் முடிவுசெய்துள்ளனர். கணினிஅறிவியல், தகவல்தொடர்பு, அடிப்படைமின்னணு தொழில்நுட்பம்,ரோபோட்டிக்ஸ் போன்றஅம்சங்கள்,வெளிநாடுகளின் பள்ளிபாடத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.


இந்த பாடங்கள், தமிழகபாடத்திட்டத்திலும் இடம்பெற உள்ளன. இதன் மூலம்,தமிழக புதியபாடத்திட்டத்தில் படிக்கும்மாணவர்கள், பிளஸ் 2முடிக்கும் முன்,என்ஜினியரீங், அடிப்படைபாடத்தை தெரிந்து கொள்ளவாய்ப்புள்ளது.


புதிய பாடத்திட்டத்தில்கணினி அறிவியல்பாடத்திற்க்குமுக்கியத்துவம் தந்து 6ம்வகுப்பிலிருந்துகொண்டுவருதனால்


அரசுப்பள்ளியில் பயிலும்ஏழை எளிய கிராமப்புறமாணவர்களும் தகவல்தொழில்நுட்பம் சார்ந்தபாடங்களில் தனியார்பள்ளி மாணவர்களுக்குஇணையாகஅமையும்,இதில் கணினிஅறிவியலில் பி.எட் பட்டம்பெற்ற 40000கணினிஆசிரியர்களுக்கும்வாய்ப்பை அமைத்துதரவேண்டும் மாண்புமிகுதமிழக அரசு..


செல்வி ரங்கநாயகி,

மாநில மகளிர் அணிதலைவி ,


தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள்சங்கம் 655/2014.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement