Ad Code

Responsive Advertisement

SPECIAL TEACHERS TET : சிறப்பாசிரியர் தேர்வில் அரசாணை மீறல் டி.டி.சி கல்வி தகுதியை புறக்கணிக்கும் டிஆர்பி

தமிழகத்தில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை எண் 185ஐ தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையில், ‘நீதிமன்ற  உத்தரவுப்படி போட்டித்தேர்வு மூலம் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளிகளில் நிரப்பப்படும். 

போட்டித்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதில்  195 கேள்வி கேட்கப்படும். என்சிசி, என்எஸ்எஸ், வேலைவாய்ப்பு பதிவு உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு 5 மதிப்பெண் வழங்கப்படும்’ என  தெரிவிக்கப்பட்டது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தயாரித்த சிறப்பாசிரியர்களுக்கான பாடத்திட்டம்  வெளியிடப்பட்டது. ஆனால், தேர்வு நடத்தவில்லை. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை.  

இதனால், தமிழக பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக  பொறுப்பேற்ற செங்கோட்டையன், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய 4 பாடங்களில் 1,188 பணியிடம், விவசாய பாடத்தில் 25 பணியிடம் என  1,123 பணியிடம் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்றார். இந்த தேர்வு, வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது.  விண்ணப்பிக்க, காலஅட்டவணை குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. 

2012ம் ஆண்டு வரை நடந்த நிரந்தர சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், 1985ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 753ன்படி கல்வித்தகுதியாக  10ம் வகுப்பு தேர்ச்சி, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, முன்னுரிமை  இனசுழற்சி ஆகிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. 

சிறப்பாசிரியர் நியமனத்திற்கு இதே கல்வித்தகுதியை அரசாணை 185ஐ கூறுகிறது. ஆனால், தற்போது டிஆர்பி இணையதளத்தில் சிறப்பாசிரியர் போட்டி  தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, அரசாணை கூறிய கல்வித்தகுதி தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் சிறப்பாசிரியர்கள் அடிப்படையான அரசு தொழில்நுட்ப தேர்வு  தேர்ச்சி குறித்து டிஆர்பி இணையதளத்தில் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இரு முக்கிய கல்வித்தகுதி குறிப்பிடப்படாததால், தேர்வர்கள் கடும்  குழப்பம் அடைந்துள்ளனர். 

தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக டி.டி.சி பயிற்சி நடத்தாமல் உள்ளது. டி.டி.சி கல்வித்தகுதி அவசியம் என்றால், 20 ஆயிரம் பேர்  விண்ணப்பிப்பார்கள். 

டி.டி.சி கல்வித்தகுதி இல்லையென்றால், அதனை முடிக்காத பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 1.50 லட்சம் பேர் விண்ணப்பிக்க  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசாணை தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி, டி.டி.சி பயிற்சி கல்வித்தகுதி எனக்கூறும் நிலையில், டிஆர்பி கல்வித்தகுதியை வெளியிட்டு தேர்வர்களுக்கு  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குழப்பமான அறிவிப்பு உள்ளதால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்கவேண்டும் என  தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது. 

Post a Comment

1 Comments

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!

    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி
    ⚫ போராட்டத்திற்கு வரும் ஆணாசிரியர்கள் அனைவரும் வெள்ளை சட்டை அணிந்து வரவும்.
    🔴 கண்டிப்பாக TET சான்றிதழ் நகலை எடுத்து வரவும்.
    🔵 போராட்ட களத்திற்கு வருபவர்கள், போராட்ட களத்தில் தொகுப்பூதிய ஒப்பந்த படிவத்தை பெற்று, அதனை தெளிவாக நிரப்பி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
    ⚫ போராட்டத்திற்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் 08:08:2017 அன்று காலை 9.00 மணிக்குள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.
    🔴 திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தபின் , பேருந்து நிலையத்தின் கடைசி நடைமேடைக்கு வரவும். சரியாக 9.20 க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை சரியாக 10.00 மணியளவில் திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை அடைவோம்.
    🔵 கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்கள் போராட்ட களத்தில் அறிவிக்கப்படும்.
    நன்றி
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமபை்பு.
    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement