Ad Code

Responsive Advertisement

JACTTO - GEO : எனதுயிர் உறவே! மாற்றுத்திறனாளி ஆசிரிய நண்பா! சென்னை பேரணியில் உனது வருகையைக் கண்டு மெய் சிலிர்த்தேன்.

  

எனதுயிர் உறவே! மாற்றுத்திறனாளி ஆசிரிய நண்பா!      சென்னை பேரணியில் உனது வருகையைக் கண்டு மெய் சிலிர்த்தேன்.
நண்பா நீ மாற்றுத் திறனாளி அல்லவே.
மாறாக,
ஆண்டவனால் குறைகளின்றி படைக்கப்பட்ட என் போன்ற ஆசிரியர்களிடத்து
 மாற்றத்தை , சுயநலம் விடுத்த தன்னம்பிக்கையை ஊட்டும் உன்னதத் திறனாளி .
உணர்வற்றோரிடத்து
உணர்ச்சி விளக்கேற்றும் ஒளித் தீபம்.

 நண்பா,
         உனக்கும் மனைவி,
குழந்தைகள்,பேரன் பேத்தி  மருமகன் மருமகள் ,உடல் சுகவீனம் ,குடும்பவேலைகள்,உறவு சார்ந்த நடவடிக்கைகள் இருந்தும்,
 எல்லாவற்றிற்கும் மேலாக உடல் உறுப்பு குறைபாட்டையும் வைத்துகாரணம்ஏதும் கூறாமல்
வருகை தந்துபோராட்டக் களத்தில் களமாடினாயே,

உனக்கு என் நன்றிகளை கூற என் தாய் மொழியில் உள்ள வார்த்தைகளும் போதாது நண்பாஎனவே அதற்கு அடையாளமாய்
வணங்கி மகிழ்கிறேன்.

அன்புடன்:-

மத்தூர் சு.சுரேஷ்.
மாவட்ட செயலாளர்.
தமிழக ஆசிரியர் மன்றம்.
கிருஷ்ணகிரி.

Image may contain: 8 people, people smiling, people standing and outdoor



Image may contain: 6 people, people smiling, crowd

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement