Ad Code

Responsive Advertisement

பாடத்திட்டத்துக்கு கருத்து தெரிவிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வம்


பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை அறிய, முதல்வன் பட ஸ்டைலில்,பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர்களும், மாணவர்களும், தங்களின் கருத்துக்களை எழுதி போட்டு வருகின்றனர்.


பாடத்திட்டத்துக்கு,கருத்து,தெரிவிக்க,ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வம்

தமிழகத்தில், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம், பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.

பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் ஆகியோர் பதவியேற்ற தும், பாடத்திட்டத்தை மாற்ற நடவடிக்கைஎடுக்கப் பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது.

இதுதொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளை கேட்கும் வகையில், மாவட்டம்தோறும், கூட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன.அத்துடன், 'ஆசிரியர்கள்மற்றும் மாணவர் களின் கருத்துகளையும் பெற வேண்டும்' என, பள்ளி கல்வி அமைச்சரும், செயலரும் உத்தர விட்டுள்ளனர்.

இதையடுத்து, முதல்வன் திரைப்பட ஸ்டைலில், பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை வரை,

ஆசிரியர்களும், மாணவர் களும், கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், 2 நாட்களாக, அவர்கள் தங்களின் கருத்துக்களை எழுதி, பெட்டிகளில் போட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement