Ad Code

Responsive Advertisement

மருத்துவம் சார்ந்த படிப்பு விண்ணப்பம் இன்று வினியோகம்

மருத்துவம் சார்ந்த, அறிவியல் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 23ம் தேதி வரை பெறலாம்.

தமிழகத்தில், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த அறிவியல் படிப்பில், 8,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

பி.எஸ்சி., நர்சிங்; பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி; பி.எஸ்சி., ரேடியோ தெரபி டெக்னாலஜி என்ற கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்; கார்டியோ பல்மொனரி பெர்பியூஷன் டெக்னாலஜி; பி.ஓ.டி., என்ற, மாற்று திறனாளிகளுக்கான சிகிச்சை நிபுணர். பி.ஆப்டம் என்ற கண் பார்வை சிகிச்சை படிப்பு, பி.பார்ம்; பி.ஏ.எஸ்.எல்.பி., என்ற செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க்குறியியல் படிப்பு, பி.பி.டி., என்ற பிசியோதெரபி ஆகியவற்றுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவற்றுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் இன்று துவங்குகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 23ம் தேதி வரை, அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை, www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement