Ad Code

Responsive Advertisement

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை? - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றின் தகுதி சான்றிதழ் முடிவு பெற்று விட்டதால், அதனை புதுப்பிக்கஅரசிடன் விண்ணப்பித்துள்ளது. ஆனால், தற்போது வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. 
இது தொடா்பாக சென்னை ஐகோர்ட்டில் அந்த பள்ளியின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
பள்ளியை மூடவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அரசு சான்றிதழ் தர மறுக்கின்றனது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பள்ளிக்கு சான்றிதழ் வழங்குவது தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு சார்பில் தொரிவிக்கப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், தொடா்ந்து 9 வருடங்களாக சான்றிதழ் இல்லாமல் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒரு பள்ளியை மட்டும் வைத்து தீா்ப்பு கூற முடியாது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் நிலை குறித்தும் அறியப்பட வேண்டியது அவசியம் என்றார்.‘தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எத்தனை பள்ளிகள் செயல்படுகின்றன?, அங்கீகாரம் பெற்ற பிறகுதான் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறதா?, மாணவா் சோ்க்கை குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனரா?, அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகள் உண்டா?’உள்ளிட்ட 13 முக்கிய கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இந்த கேள்விகள் அனைத்திற்கும் வருகிற 30ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement