Ad Code

Responsive Advertisement

இந்திய சுதந்திரம்: டூடுல் வெளியிட்ட கூகுள்!



இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம்
டூடுல் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15)

உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதுபோல் மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதைச் செலுத்தினர். இந்நிலையில், பிரபல இணையத்தளமான கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விழாக்களின் போது டூடுல் வெளியிட்டு அவற்றை கவுரவப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாடாளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டுக் கௌரவப்படுத்தியுள்ளது.

கூகுள் வெளியிட்ட இந்த டூடுளில் இந்திய நாடாளுமன்றம், இந்திய தேசிய பறவையான மயில் மற்றும் அசோக சக்கரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த டூடுளை மும்பையைச் சேர்ந்த ஓவியரான சபீனா கார்னிக் வடிவமைத்துள்ளார். இந்த டூடுளுக்கு இணையதள வாசிகளிடமும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் செங்கோட்டை, இந்திய தேசியக் கொடியின் பல்வேறு பரிணாமங்கள், மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை மற்றும் இந்திய தபால்தலைகளை சுதந்திர தினத்தின்போது கூகுள் நிறுவனம் டூடுளாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement