Ad Code

Responsive Advertisement

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கடலூர் வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:நீட் தேர்வில் தமிழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமரை நான்கு முறை சந்தித்திருக்கிறோம்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.இதற்காக 54 ஆயிரம் கேள்விகளுக்கான விடைகள்தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ளோம்.பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆய்வின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் வரையறைப்படி, உயர்மட்டக்குழு பரிந்துரையின் பேரில் புதிய பாடத்திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கும் என்று கூறினார்.

ஆசிரியர் பற்றாக்குறை இல்லை

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இருக்கிறோம்.கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை’’என்று அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement