Ad Code

Responsive Advertisement

பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதிய உயர்வு : பள்ளி கல்வித் துறை உத்தரவு

நான்கு ஆண்டுபோராட்டத்திற்கு பின்பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும், உயர்கல்விக்கு 2 ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி தகுதிகளுக்கு ௨ ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., (அ) எம்.எஸ்சி.,க்கு முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் பல்கலை.,கள் தொலைதுாரகல்வியில் இருந்து எம்.எட்.,ஐ நீக்கின. இதனால்ஆசிரியர்கள் தொலைதுார கல்வி மூலம் எம்.எட்., படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எம்.எட்.,க்கு பதிலாக எம்.பில்., (அ) பி.எச்டி., முடித்திருந்தாலும் ௨வது ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என, 2013, ஜன.,1 ல் பள்ளி கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.

தமிழாசிரியர்களை பொறுத்தவரை பி.லிட்., முடித்தோர் எம்.ஏ.,க்கு ஒரு ஊக்க ஊதியமும், பி.எட்.,க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர். ஆனால் பி.ஏ., பி.எட்., முடித்து பட்டதாரி தமிழாசிரியராக சேர்ந்தோருக்கு எம்.ஏ.,க்கு மட்டும் ஒரே ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வந்தது.'மற்ற பட்டதாரி ஆசிரியர்களைப்போல் தங்களுக்கும் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து ஒரு ஆசிரியர் தங்களது பணிக்காலத்தில் உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு பெறலாம். அதன்படி பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் எம்.எட்., (அ)எம்.பில்., (அ) பி.எச்டி முடித்திருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம். இந்த உத்தரவை அரசாணை வெளியிட்ட 2013, ஜன.,1லிருந்து செயல்படுத்த வேண்டுமென, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement