Ad Code

Responsive Advertisement

JIO - ஆஃபர்களில் அதிரடி மாற்றம்: புது லிஸ்டில் எது பெஸ்ட்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீ பைய்டு ரீசார்ஜ் ஆஃபர்களில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து மொபைல் சேவைகளையும் இலவசமாக வழங்கி வாடிக்கைளயாளர்களை வளைத்துப்போட்டது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலவசங்களை நிறுத்திவிட்டு, கட்டண சேவையைத் தொடங்கியது.

இலவசத்துக்கு மயங்கிய வாடிக்கையாளர்களை கட்டண சேவையிலும் கட்டிப்போட நினைத்த அந்நிறுவனம் ஜியோ ப்ரைம் உறுப்பினரானால், குறைந்த கட்டணத்தில் பழையபடி எல்லாம் இலவசம் என்ற சலுகையை அளித்துள்ளது.

இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் முகமாக தனது ஆஃபர்களில் மாற்றங்கள் செய்திருக்கிறது.

இதுவரை உள்ள ஆஃபர்கள்

309 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிட்டியில் தினமும் 1GB 4G டேட்டா (அதற்கு மேல் 128/Kbps) மற்றும் இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவற்றைப் பெறலாம்.

509 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 56 நாட்கள் வேலிட்டியில் தினமும் 2GB 4G டேட்டா (அதற்கு மேல் 128/Kbps) மற்றும் இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவற்றைப் பெறலாம்.

புதிய ஆஃபர்கள்

349 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 56 நாட்கள் வேலிட்டியில் மொத்தமாக 20GB 4G டேட்டா (அதற்கு மேல் 128/Kbps) மற்றும் இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவற்றைப் பெறலாம். தினசரி 1GB 4G டேட்டாவை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்று குறைந்த டேட்டா ஆஃபர் போதும் என்று நினைப்பவர்களுக்காக இந்த சலுகை அறிமுகமாகியுள்ளது. இதில் கிடைக்கும் 20GB 4G டேட்டாவை 56 நாட்களுக்கு பொறுமையாக பயன்படுத்தலாம்.

599 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் பலன்கள் ரூ.309 ரீசார்ஜ் போலவே உள்ளது. ஆனால், இதில் கிடைக்கும் மிகப்பெரிய கூடுதல் சலுகை, 84 நாட்கள் மெகா வேலிடிட்டி. அதாவது, 84 நாட்களுக்கு தினமும் 1GB 4G டேட்டா (அதற்கு மேல் 128/Kbps) மற்றும் இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவற்றைப் பெறலாம்.

மாற்றம்

புதிதாக வந்திருக்கும் இந்த இரு ஆஃபர்கள் தவிர மற்ற அனைத்தும் உள்ளபடியே தொடர்கின்றன. ஜியோ வாடிக்கையாளர்களின் அனைத்து விவரங்களும் களவு போனதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த புதிய ஆஃபர்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் வித்தை என்று வியாபார நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement