Ad Code

Responsive Advertisement

ஜியோ போன்ல 'தற்போதைக்கு' வாட்ஸ் அப் இல்லையாம்! ஆனா வேற ஒன்னு இருக்கு!

ஜீரோ காஸ்டில் கிடைக்கவுள்ள ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குரூப்பின் முகேஷ் அம்பானி ரூ.0 விலையில் ஜியோ போனை இன்று அறிமுகப்படுத்தினார். இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.


இந்த போனுக்காக செலுத்தப்படும் 1500 ரூபாய் டெப்பாசிட் தொகை 36 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 4ஜி இணையதள சேவையை பெறமுடியும்.

அதேநேரத்தில் இந்த போனில் பிரதமரின் மான் கீ பாத் செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் ஃபேஸ்புக் வசதியும் ரிலையன்ஸ் ஜியோ போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வாட்ஸ்அப்க்கு பதிலாக ரிலையன்ஸ் ஜியோ தனக்கான ஒரு சாட் அப்ளிக்கேஷனை கொண்டுள்ளது. அதாவது, ஜியோ சாட் அப்ளிகேஷன் இந்த போனில் உள்ளது.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி முன்பதிவுக்கு முன்னதாக ஜியோ போனில் உள்ள வசதிகள் அனைத்தும் தெளிவாக முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போன் ஏராளமான சலுகைகளுடன் சந்தைக்கு வர இருப்பதால் அதனை பெற மக்கள் இப்போதே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement