Ad Code

Responsive Advertisement

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு விபரம் விரைவாக தர வலியுறுத்தல்

 'ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு, புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை தராமல் இருப்பவர்கள், விரைவாக கொடுங்கள்' என, உணவு துறை வேண்டு கோள் விடுத்துள்ளது. இது குறித்து, உணவு வழங்கல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக, 'ஸ்மார்ட்' கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. பலர், இதுவரை, ஸ்மார்ட் கார்டு பெறவில்லை என, தெரிகிறது.
பெறாதவர்கள், www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில், பயனாளர் நுழைவு பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு, ரேஷன் கடையில் பதிவு செய்த மொபைல் எண்ணை, பதிவு செய்து நுழையலாம்

 அவ்வாறு, நுழைந்த பின், பயனாளரின் மொபைல் போன் எண்ணிற்கு வரும், 'பாஸ்வேர்டை' பதிவு செய்தால், திரையில் தோன்றும், 'ஸ்மார்ட் கார்டு விபர மாற்றம்' என்ற பகுதிக்கு செல்லும். 

அதில், குடும்ப தலைவர் புகைப்படம் உள்ளிட்ட இதர விபரங்கள், தமிழ், ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என, தெரிந்து 
கொள்ளலாம். 

அவ்வாறு இல்லையேல், புகைப்படம் மற்றும் பதிவேற்றம் செய்த விபரங்களை திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னரே, ஸ்மார்ட் கார்டு 
அச்சிடப்படும்

 கார்டுதாரர்கள், மேற்கண்ட இணையதளம் தவிர்த்து, 'TNEPDS' என்ற மொபைல், 'ஆப்' மற்றும் அரசு இ - சேவை மையங்கள் மூலமும், திருத்தங்களை செய்யலாம்; புகைப்படத்தை பதிவேற்றலாம்

 இணையவசதி இல்லாதவர்கள், தங்களது ரேஷன் கடை ஊழியர்கள் அல்லது உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களில், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை எழுதி, பழைய ரேஷன் கார்டு நகலுடன் வழங்கலாம்
 சரியான விபரம் மற்றும் புகைப்படம் இல்லாத, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படாத கார்டுதாரர்கள் விபரங்கள், ரேஷன் கடையில் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த பட்டியலில் பெயர் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி, விபரங்களை விரைவாக வழங்கினால், ஸ்மார்ட் கார்டு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement