Ad Code

Responsive Advertisement

விவசாயி முதல் ஜனாதிபதி வரை

பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த் விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று கவர்னர் வரை பல்வேறு பதவிகளை வகித்தவர்..


          இவரது வாழ்க்கை குறிப்பு:பெயர்: ராம்நாத் கோவிந்த், 71. பிறந்த தேதி: 1945 அக்., 1. குடும்ப தொழில் : விவசாயம் சொந்த ஊர்: தேராபூர், கான்பூர் மாவட்டம், உத்தரபிரதேசம். கல்வித் தகுதி : பி.காம்., - எல்.எல்.பி., பட்டம், கான்பூர் பல்கலைக் கழகம். திருமணம்: 1974 மே 30 குடும்பம்: மனைவி சவீதா குழந்தைகள்: மகன் பிரஷாந்த், மகள் ஸ்வாதி. சிவில் தேர்வு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். ஆனால் ஐ.ஏ.எஸ்., பணி கிடைக்காததால், சட்டத்துறையில் கவனம் செலுத்தினார். வழக்கறிஞர் பணி 1971: டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு. 1978: சுப்ரீம் கோர்ட்டில், 'அட்வகேட் ஆன் ரெக்கார்டு' பணி. 1979: டில்லி ஐகோர்ட்டில், மத்திய அரசு வழக்கறிஞர். 1980 - 1993: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசின் ஸ்டேன்டிங் கவுன்சில்.பார்லிமென்ட் பணி பார்லிமெண்ட் பணி 1994 : பா.ஜ., சார்பில் உ.பி., யில் இருந்து முதன்முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வானர்.
2000ம் ஆண்டு 2வது முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். * எம்.பி.,யாக இருந்தபோது, உள்துறை, பெட்ரோலியம், சமூக நலம், சட்டம் மற்றும் நீதி, எஸ்.சி., - எஸ்.டி., நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழுக்களில் பணி. 1998 - 2002 வரை பா.ஜ., தலித் மோர்ச்சா பிரிவு தலைவராக இருந்தார். * 2002ல் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் இருந்தார். * லக்னோவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் கோல்கட்டா ஐ.எம்.எம்., கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினராக பணிபுரிந்துள்ளார் * 2015 ஆக., 8ல் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 2017 ஜூன் 20ல் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். முதல் குடிமகன் * 2017 ஜூலை 20: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து, நாட்டின் 14வது ஜனாதிபதி ஆனார்.
கே.ஆர்.நாராயணனுக்கு பின் தலித் பிரிவை சேர்ந்த 2வது ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவர். உ.பி.,யில் இருந்து நிறைய பிரதமர்கள் வந்துள்ளனர். முதன்முறையாக அம்மாநிலத்தை சேர்ந்தவர் 'ராஷ்ட்ரபதி பவனில்' நுழைந்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement