Ad Code

Responsive Advertisement

பணி நிறைவு சான்று கட்டாயம் கடன் பெற வங்கிகள் நிபந்தனை?



புதிதாக வீடு வாங்கும்போது, அது தொடர்பானஆவணங்களை, வங்கிகள்அடமானமாக பெறுகின்றன.இதேபோல, சொத்துபத்திரங்களை பெற்றுக்கொண்டும், அடமான கடன்வழங்கப் படுகிறது.கட்டுமான நிலையில் உள்ளவீட்டை வாங்குவோருக்குகடன் வழங்க ஒருநடைமுறையும்,பயன்பாட்டில் இருக்கும்வீட்டுக்கு அடமான கடன்வழங்க, வேறுநடைமுறையும்பின்பற்றப்படுகிறது.

அதாவது, கடன்கேட்போரிடம், அடையாளஆவணங்கள், வருமான வரிஆவணங்கள், முகவரிசான்று, வருவாய் சான்று,சொத்து தொடர்பானபத்திரங்கள், வில்லங்கசான்று, தாய் பத்திர நகல்,திட்ட அனுமதி வரைபடம்போன்றவை பெறப்படும்.இதன் அடிப்படையில்,சொத்து மதிப்பீடுசெய்யப்பட்டு, கடன் தொகைமுடிவு செய்யப்படும்.தற்போது, அடுக்குமாடிகுடியிருப்பு வீடுகளுக்கு,அடமான கடன்கோருபவர்கள், பணிநிறைவு சான்றிதழைஇணைக்க வேண்டும் என,தேசிய மயமாக்கப்பட்டவங்கிகள் கோருவது,சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, தமிழகவீடுகள், அடுக்குமாடிகுடியிருப்பு கட்டுவோர்சங்கங்களின் கூட்டமைப்புதலைவர், பி.மணிசங்கர்கூறியதாவது:சென்னைபெருநகர் வளர்ச்சிகுழுமமான, சி.எம்.டி.ஏ.,எல்லைக்குள், மூன்றுதளங்களுக்கு மேற்பட்டசிறப்பு கட்டடங்கள்,அடுக்குமாடிகட்டடங்களுக்கு மட்டுமேகட்டுமானப் பணி நிறைவுசான்று வழங்கப்படுகிறது.பயன்பாட்டில் உள்ளவீடுகளுக்கு அடமான கடன்கோரி விண்ணப்பித்தால்,முன்னணியில் உள்ளதேசியமயமாக்கப்பட்டவங்கிகளின் அதிகாரிகள்,கட்டட பணி நிறைவு சான்றுகேட்டு நிர்பந்திக்கின்றனர்.

பணி நிறைவு சான்றுவழங்கும் நடைமுறையேஇல்லாத பகுதிகளில்,வங்கிகள் இது போன்றநிர்பந்தம் செய்வது சரியானநடைமுறை அல்ல;நிபந்தனைகளை தளர்த்தவேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement