Ad Code

Responsive Advertisement

இனி ஏ.டி.எம். கார்டுகளில் பின் நம்பர் தேவையில்லை

இனி வரும்காலங்களில் இதற்கு அவசியமிருக்காது.

பணம் எடுப்பதற்காக ஏ டி எம் சென்றாலோ, ஹோட்டலிலோ அல்லது வேறு வர்த்தக நிறுவனங்களில் பொருள்கள் வாங்கிய பிறகு பணம் செலுத்தும்போதோ அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை
செய்யப்படும்போது ‘பின்’ எண் எனப்படும் இரகசியக் குறியீட்டு எண்ணை அழுத்துவோம். அந்த தனிப்பட்ட எண்ணின் சரியான உள்ளீட்டிற்குப் பிறகே பரிவர்த்தனை முடிவுக்கு வரும்.
இடையில் அந்த எண் களவாடப்படுவதாகவும், பாதுகாப்பு மிகவும் குறைவு என்றும் பேசப்பட்டு வந்தது. ஆகவே சில வங்கிகளின் ஏ டி எம் இயந்திரங்களில் எண்களை மூடி மறைக்கும் படியாக மூடிகள் போடப்பட்டிருக்கும். (இதில் சிரமமும் இருக்கும்).
இதற்கிடையில் ஒரு வெளிநாட்டு சர்வே சொல்கிறது பத்தில் எட்டு பேர் ஒரே மாதிரியான எண்களைக் கொண்ட ‘பின்’ பயன்படுத்துகிறோமாம்.  ????


இன்னும் எல்லாம் டிஜிட்டல் மாயம் ஆகிவருவதால் 2020 ஆண்டிற்குள் சராசரியாக ஒரு மனிதன் நூற்றுக்கணக்கான ‘பாஸ்வேர்ட்’ அல்லது ‘பின்’ எண்ணை நினைவில் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆகவேண்டியிருக்குமாம்.
இதனை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு அட்டை பரிவர்த்தனையில் முன்னோடியாகத் திகழும் ‘விஸா’ நிறுவனம் இனி பணப்பரிவர்த்தனைகளுக்கு ‘பயோமெட்ரிக்’ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
‘பின்’ எண்களுக்குப் பதிலாக விரல்ரேகை, கருவிழிப்படலம், குரல் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவைகளின் மூலம் பரிவர்த்தனைகளை முடிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே இந்த உயரிய தொழில்நுட்பம் நம்மை மகிழ்விக்கும் !

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement