Ad Code

Responsive Advertisement

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்

''கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என, தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:ராணுவ ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி, 2,000 இளைஞர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள, 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஆண்டுக்கு இரண்டு முறை திறன் பயிற்சிக்கான முகாம்கள் நடத்தப்படும்; இதற்காக, 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள், திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை, இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக, நான்கு லட்சம் ரூபாயில், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை, வெளி மாநில தொழிலாளர்களும் பெறுவதை உறுதி செய்யும் வகையில், 26 லட்சம் ரூபாய் செலவில், 254 கள அலுவலர்களை பயன்படுத்தி, அவர்கள் பணிபுரியும் இடங்களில் பதிவு மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 முதல், 2015 வரை, பதிவினை புதுப்பிக்க தவறிய, இரண்டு லட்சம் பேருக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் 
தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement