Ad Code

Responsive Advertisement

மாணவ-மாணவிகளுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க பள்ளிகளுக்கு தடை அரசு உத்தரவு

இது தொடர்பாக தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:


பள்ளி மாணவ மாணவிகள் உடல் ரீதியான, மனரீதியான விளைவுகளை தடுக்கும் வகையில் புத்தகச்சுமையைக் குறைப்பது, வீட்டுப்பாடம் அளிப்பதைத் தடுப்பது குறித்து பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதிக்கப்படுகிறது.
1-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு 1.5 கிலோவுக்கு  மேல் புத்தக பை இருக்க கூடாது. 3-ம் வகுப்பு மற்றும் 4-வகுப்பு குழந்தைகளுக்கு 3 முதல் 5 கிலோவுக்கு மேல் புத்தக பை எடை இருக்க கூடாது.
அடுக்குமாடி கட்டிடங்களில் செயல்படும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புத்தக பையை எடுத்து கொண்டு மாடி ஏறிச்செல்வதால் சோர்வு ஏற்படுகின்றனது. 
மேலும் புத்தக பையில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வருவதால் ஏற்படும் சுமையைக் குறைக்க, பள்ளிகளிலேயே சுத்தமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கு பள்ளிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement