Ad Code

Responsive Advertisement

பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு?



வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சீனியாரிட்டி அடிப்படையில் பகுதி நேரப் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்றுவரை பணி நிரந்தரம் மற்றும் சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2012-ம் ஆண்டு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பேர்களைப் பகுதி நேர ஆசிரியர்களாகத் தமிழக அரசு பணியில் அமர்த்தியது. அப்போது அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வோர் ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து அவர்களுக்கான சம்பளம் மற்றும் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பகுதி நேர ஆசிரியர்களுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் சுமார் 20,000 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாகப் பெற்று வருகிறார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு 2,000 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால், அதன் பிறகு சம்பளம் ஏற்றப்படவில்லை. இன்று பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் வெறும் 7,000 ரூபாய் மட்டுமே தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாரத்தில் மூன்று அரை நாள்கள் மட்டுமே பணியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் முழு நேர பணி வழங்கக் கோரியும். அரசாங்கத்தால் வழகப்படுகிற சிறப்புச் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றும், தமிழகப் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இன்று வள்ளுவர் கோட்டத்திலும் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சேப்பாக்கம் திடலிலும் போராடப்போவதாகப் பகுதி நேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement