Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த ஜூன் 30 ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டன. அதன்படி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.71 சதவீதம் பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் 3.66 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கான அழைப்புக் கடிதத்தை www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் அழைப்புக் கடிதத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement