Ad Code

Responsive Advertisement

சாதனை மாணவர்களுக்கு முதல்வர் ரூ.10 லட்சம் பரிசு

சென்னை: மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, சாதனை படைத்த, கரூர் மாணவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கி, முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.



கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிபாத் ஷாருக். இவரது தலைமையில், மாணவர்கள் யக்ஞா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத், முகமது அப்துல் காசிப் ஆகியோர் இணைந்து, 64 கிராம் எடை கொண்ட, மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினர்.
அந்த செயற்கைக்கோள், அமெரிக்க விண்ெவளி ஆராய்ச்சி நிறுவனமான, 'நாசா' நடத்திய போட்டியில், முதல் பரிசு பெற்றது. உலகின், 57 நாடுகளில் இருந்து, 80 ஆயிரம் மாதிரிகள் பங்கேற்றதில், இந்த சிறிய செயற்கைக்கோள், முதல் பரிசு பெற்றது. இந்த சாதனையை படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி, ஜூன், 24ல், சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement