Ad Code

Responsive Advertisement

FLASH NEWS: அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.



   
தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு பள்ளியில் தொடங்கிய ஆங்கிலவழி வகுப்புகளை தமிழ்வழி ஆசிரியரே நடத்துகிறார் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பகுதி நேர தொழில் செய்வது வேதனை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை அரசு கட்டாயம் ஆக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்பை நடத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு வராத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ளார். மேலும் ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்க  கூடாது ? ஆசிரியர்களின் வருகையை CCTV கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன் என்றும் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். 

2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம்    தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? - உயர்நீதிமன்றம் கேள்வி...   ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? - சென்னை உயர்நீதிமன்றம்...  2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம்   பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ? - சென்னை உயர்நீதிமன்றம்...    அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது- நீதிபதி கிருபாகரன்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement