Ad Code

Responsive Advertisement

அரசுப்பள்ளியால் மட்டுமே இது முடியும் - எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரே ஒரு மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிய பாடப்பிரிவை துவக்கிய அரசுப்பள்ளி

ப்ரீத்தி என்ற ஒரே ஒரு மாணவிக்காக பதினொன்றாம் வகுப்பில், பிசினஸ் மேத்ஸ் பிரிவைத் துவக்கி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது கோயம்புத்தூர், சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த்-வீர்சந்த் அரசு மேல்நிலைப்பள்ளி. 


தனியார் பள்ளிகளில் கொள்ளை லாபம் அடித்து கொடி கட்டி பறப்பதை ஊரே அறிந்தாலும், போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகளை சேர்த்துகிற பெற்றோர்கள் இங்குண்டு. ஆனால் இதுபோன்ற தனியார் பள்ளிகளில் மாணவர்களின் நலன் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரே ஒரு மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையை ஏற்று இல்லாத ஒரு துறையையே உருவாக்கிய அரசுப்பள்ளியின் செயல் அனைவரின் மனதையும் நெகிழச்செய்துள்ளது.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு இவரின் மனைவி புவனேஷ்வரி. நாளிதழ் விநியோகிக்கும்வேலை பார்த்து வரும் சிட்டிபாபுவுக்கு ப்ரீத்தி என்கிற மகள் உண்டு. இவர் உடல்வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளியாவார். ப்ரீத்தி சீரநாயக்கன்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புதேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்றுபள்ளியில் 2ம் இடம் பிடித்துள்ளார். படிப்பில் சுட்டியான ப்ரீத்தி பள்ளியின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்படுகிறார்.

ப்ரீத்தி அடுத்தநிலையில் படிப்பை தொடர்வதற்கு தான் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவு கிடைக்கவில்லை. எளிதில் கிடைக்கும் பணிதவியல் பாடப்பிரிவு அப்பள்ளியில் இல்லை. வேறு எங்கும் சென்று படிக்கஉடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், தான் படித்த அரசுப் பள்ளியிலேயே மேல்நிலைவகுப்பை தொடர ஆசைப்பட்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திடமும்,கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் தாயார் உதவியோடு சென்று தனது நிலையை தெரிவித்தார். அத்துடன் சீரநாயக்கன்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் தனக்கும், தன்னைப்போன்ற மாணவர்களுக்கும் பயன்படும்வகையில் 3வது பாடப்பிரிவை நடத்தவேண்டுமென வலியுறுத்தினார். அதைபரிசீலித்த கல்வித்துறையினர், உடனடியாகஅப்பள்ளியில் கணிதவியில் 3வது பாடப்பிரிவை தொடங்க பரிந்துரைத்துள்ளனர்.மாணவிக்கு உதவத் தயாராக இருந்த பள்ளிநிர்வாகம், அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த உடனேயே அதற்கான  வேலைகளை தொடங்கிவிட்டனர்.

இந்த பிரிவு துவங்கி ஆகும் செலவை இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இந்த பள்ளியில் படித்து பல இடங்களில் பணியில் அமர்ந்திருக்கிற முன்னாள் மாணவர்களும் ஏற்றுள்ளனர். ஒருமாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையை  ஏற்று தனிப்பிரிவையே துவங்கியுள்ளது அனைவரது பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து மாணவி ப்ரீத்தி கூறுகையில்,‘என்னால் நடக்கவோ, வேலைகளைச்செய்யவோ முடியாது. அம்மாவின்  துணையோடே பத்து வருடங்களாக பள்ளிக்கு சென்று வந்தேன். எனது கோரிக்கையை ஏற்று  இதே பள்ளியில் 3வதுபாடப்பிரிவு தொடங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டப்படிப்பை முடித்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதவேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறேன் என்றார்.

இந்த மாணவியை தாயைத்தவிர வேறு யாரும் நுட்பமாக கவனித்துக்கொள்ள முடியாது என்பதால் இவரின் தாயருக்கும் இந்த பள்ளியிலேயே சின்னசின்ன வேலையை செய்வதற்கு பணியில் அமர்த்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. ப்ரீத்தியின் தாயர் புவனேஷ்வரி கூறுகையில், தங்கள் குழந்தையைப் போல எனது மகளை பள்ளியில் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த அரவணைப்பே அவளை ஊக்கப்படுத்தியது; சாதிக்கவைத்தது. வேறு எங்கும் சென்று அவளால்படிக்க முடியாது என்பதை புரிந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார் உருக்கமாக.

ஆயிரம் இருந்தாலும் அரசுப்பள்ளிதான் நம்ம பள்ளி என அனைவரையும் சபாஷ்போடவைத்திருக்கிறது சீரநாயக்கன்பாளைய அரசுப்பள்ளி.

"ஜூலி டீச்சர்களும், சரவணன் சார்களும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்"

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement