Ad Code

Responsive Advertisement

கார், பைக் வைத்திருப்பவர்கள் வாகனம் ஓட்டும்போது ஒரிஜினல் லைசென்ஸ் தேவை : தமிழக அரசு உத்தரவு



தமிழக அரசு சார்பில் சாலைபாதுகாப்பு ஆணையர் நேற்றுவெளியிட்டுள்ள அறிக்கை:போக்குவரத்து துறைஅமைச்சர் தலைமையில்மாநில சாலை பாதுகாப்பு குழுகூட்டம்

தலைமை செயலகத்தில்நடைபெற்றது. இந்தகூட்டத்தில் தலைமைசெயலாளர், உள்துறை,நிதித்துறை, நெடுஞ்சாலைதுறை, நகராட்சி மற்றும் குடிநீர்வழங்கல் துறை,போக்குவரத்து துறைசெயலாளர்கள், காவல் துறைஇயக்குநர், சென்னைபெருநகர காவல் ஆணையர்மற்றும் பிற துறைகளைசேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், உச்ச நீதிமன்றசாலை பாதுகாப்பு குழுவின்பரிந்துரையை ஏற்று,வாகனத்தை அதிவேகமாகஇயக்குதல், சிவப்பு விளக்கைதாண்டுதல், குடிபோதையில்வாகனம் ஓட்டுதல்,வாகனத்தை ஓட்டும்போதுசெல்போனைபயன்படுத்துவது, சரக்குவாகனங்களில் அதிக பாரம்ஏற்றுதல் அல்லது சரக்குவாகனங்களில் ஆட்களைஏற்றுதல் போன்றபோக்குவரத்துவிதிமீறல்களுக்குசம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின்ஓட்டுநர் உரிமங்களைதற்காலிகமாக அல்லதுநிரந்தரமாக ரத்து செய்யுமாறுகூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.

மேலும், உயிரிழப்புஏற்படுத்திய வாகனஓட்டுநர்களின் ஓட்டுநர்உரிமங்களை திரும்பப்பெறுவதற்கு முன்பாகதமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தினரால் நடத்தப்படும்பயிற்சி மையங்களில் இரண்டுநாள் புத்தாக்க பயிற்சியினைஅவரவர்களின் சொந்தசெலவில் மேற்கொண்டு உரியசான்றினை பெற்று சமர்ப்பிக்கவேண்டும். வாகன ஓட்டிகள்அனைவரும் வாகனத்தைஓட்டும்போது அசல் உரிமம்வைத்திருக்க வேண்டும்.சோதனை அலுவலர்கள்ஆய்வின்போது அசல்உரிமத்தை கட்டாயம்காண்பிக்க வேண்டும்.

ஹெல்மெட் போடாவிட்டால் 2மணிநேரம் பாடம் படிக்கவேண்டும்


அரசின் செய்திக்குறிப்பில்‘இரு சக்கர வாகன ஓட்டிகள்மற்றும் பின்னால் அமர்ந்துசெல்லும் பயணியும்கட்டாயமாக தலைக்கவசம்அணிய வேண்டும்.தலைக்கவசம் அணியாமல்இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகளைஅருகாமையில் உள்ள தாலுகாகாவல் நிலையம் அல்லதுவட்டார போக்குவரத்துஅலுவலகம் அழைத்துச்சென்று குறைந்த பட்சம்இரண்டு மணி நேரம்விழிப்புணர்வு பற்றிய பயிற்சிகொடுக்கப்பட வேண்டும்,அத்துடன் உரியஅபராதத்தையும் வசூலிக்கவேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement