Ad Code

Responsive Advertisement

TAMILNADU SCHOOL STUDENTS IMPORTANT POINTS

மாணவர்களுக்கான குறிப்புகள்

மாணவர்கள் என்பவர்கள் தேசத்தின் முக்கிய வளமாக கருதப்படுபவர்கள் .

'மாணவ சக்தி ஆயிரம் அணுசக்திகளை விட ஆற்றல் வாய்ந்தது

மாணவ புக்தி ஆயிரம் கத்திகளை விட கூர்மையானது '

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாணவர்களான நீங்கள் முதலில் உங்களைப் பற்றி அறிய வேண்டும் . மாணவ பருவம் அனைவரின் வாழ்விலும் வரபிரசாதமாகும் . இதனை இன்றைய மாணவர்களான நீங்கள் அறிய வேண்டும் . உலகை இயக்கும் உந்து சக்தி நீங்களே உங்கள் ஆற்றல்தான் உலகுகிற்கும் நீங்கள் சார்ந்த தேசத்திற்கும் ஆதாரவளம் ஆகும் . உங்களிடம் இருக்க வேண்டியது ஒழுக்கம் அதுவே உங்கள் முதல் அடையாளம் ஆகும் . அத்துடன் கவனம் மாணவ செல்வங்களே உங்களைப் பற்றிய கவனம் நீங்கள் வைக்க வேண்டும் .


உங்களது வகுப்புகள் , விளையாட்டு மைதானம் , நண்பர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் போன்ற அனைத்து இடங்களிலும் நீங்கள் கவனமுடன் விழிப்புடன் மற்றும் ஆர்வமுடன் இருக்க வேண்டும் .

அது உங்களை அடுத்த படி ஏற வைக்கும் .முடிவெடுத்தல் :

முடிவெடுத்தல் என்பது மிக முக்கிய பொறுப்பாகும் . மாணவர்கள் தங்களுடைய பள்ளி பருவம் மற்றும் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் உரிமையுடையவர்கள் நீங்களே ஆதாலால் முடிவெடுங்கள் . உங்களுடைய எதிர்காலம் உங்கள் கையில் அத்துடன் பெற்றோர்களிடமும் கலந்துறையாடுங்கள் உங்களது முடிவிற்கான சாத்தியகூறுகள் எவ்வாறு உள்ளன . அதன் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஆராய வேண்டும் அத்துடன் நீங்களே அதற்கு உங்களை தயார் செய்ய வேண்டும் .

 உங்களது முடிவுக்கு நீங்களே பொறுப்பு என்பதை மறக்க வேண்டாம் . கல்வியுடன் உங்களது அறிவை மெருக்கேற்றுங்கள் அதுவே சிறந்தது . விளையாட்டு பேச்சு, ஆடல் பாடல் போன்ற தனித்திறமையை வளர்த்துகொள்ளுங்கள் பின்னாளில் அதுவே உங்களுக்கான துறையாக இருக்கலாம் . தேடல் தொடருங்கள் பறந்து யோசியுங்கள் ,,,,

'

தேவை முடிந்தபின்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சிலரது தேடல் ' மாணவர்களின் தேடல் இப்படியிருக்க இருக்க வேண்டும் .

செயல்பாடு :

மாணவர்களே உங்கள் செயல்பாடுகள் முடிவெடுத்தலின் அடுத்த கட்டமாகும் . அது மிகவும் முக்கியம் எடுத்த முடிவுகள் மாற்றம் ஏற்படும் போது அதனை கண்டு அஞ்ச வேண்டாம் . ஏமாற்றம் கொள்ளவும் வேண்டாம் . மாணவர்களுக்கு இரு கூறுகள் அதை எப்பொழுதும் கடைப்பிடிக்கத் தவறாதீர்கள் முதலில் 'வாய்ப்பு என்பது எப்பொழுதும் அமையாது, நாம் தான் அமைத்துகொள்ள வேண்டும் . 

தோல்விகள் என்பது நம்மை தூங்க வைக்கும் தாலாட்டு அல்ல, நாம் தொடர்ந்து நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம் '

இதனை மனதில் கொண்டு ஒரு சில நடவடிகைகளில் இரு கூறுகளை செயல் படுத்தி ட்ரெயில் கானுங்கள் பின் தொடருங்கள் செயல்பாட்டை வெற்றி உங்களுடையதாக இருக்கும் . தோல்வி ஏற்படும் போது அதனை அடுத்து எதிர்கொள்ளும் பக்குவம் எளிதில் கிடைக்கும் .

பொறுப்புணர்வு :

மாணவர்களே நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் அதற்கு அந்த செயலில் ஆர்வம் வேண்டும் அத்துடன் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே சூழல் அமைவதில்லை சில மாணவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான சூழல் அமையும் , சில மாணவர்களுக்கு அசாதரணமான சூழல் அமையலாம் வேலை செய்து படிப்பது போன்றவை அமையலாம் அவையனைத்தும் நமக்கான கடமைகள் என்பதை உணர்ந்து செயல்படுவோம் . 

எப்படிபட்ட சூழலிலும் பொறுப்புணர்வை விட்டுதராதவரே வாழ்வில் வெற்றி 
பெறுவார் .மனதில் உறுதி செயலில் ஆக்கம் இருப்பின் மலைபோல் உள்ள அனைத்து இன்னல்களும் மடுவாகும் என்ற நம்பிக்கையோடு நடைபோடுங்கள் நல்வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே..

பயம் தயக்கநிலை தவிர்ப்பு :

மாணவர்கள் எதற்காகவும் பயம் மற்றும் படபடப்புக்கு நிலைக்குபோக தேவையில்லை . உயர்நிலை முதல்வகுப்பு மற்றும் கல்லுரிக்கு முதல் நாள் செல்லும் போது தயக்கம் மற்றும் பய உணர்வு வர வாய்ப்பு அளிக்க வேண்டாம் . கல்லுரி பள்ளி எதுவானாலும் எளிதாக கூல் மைண்டுடன் எதிர்கொள்ளுங்கள் 

நேர்மறை சிந்தனையுடன் எப்பொழுதும் இருக்க வேண்டியது அவசியமாகும் . மனதைரியம் உடனிருக்க இமயமலை உயரமும் கடந்துசெல்ல கூடிய ஒன்றுதான் முதல் நாள் முதலாண்டு பயிலும் மாணவர்களே துணிவுடன் உறுதி போதும் எல்லாம் எளிதாகும் .

தேசத்தின் உந்து சக்தி நீங்களே

தேடவேண்டாம் வானிலே!,,

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement