Ad Code

Responsive Advertisement

தொடக்கப் பள்ளிகளில் 'FLASH CARDS'

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. 

பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நிகராக, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, ஆங்கில மொழியில் பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்காக, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த நிலையை மாற்ற, அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே, ஆங்கில மொழி திறனை வளர்க்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதல் கட்டமாக, தொடக்கப் பள்ளிகளில், பிளாஷ் கார்ட் அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஆங்கில எழுத்து, பழம், காய்கறி, விலங்கு, பறவை போன்றவற்றின் பெயர்களை விவரிக்க, வண்ண படங்களுடன் கூடிய அட்டைகளை பயன்படுத்தி, வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement