Ad Code

Responsive Advertisement

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம் !!!

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நிர்வாக கட்டிடம்

சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்ட நிர்வாகக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

தமிழ் மென்பொருள்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் தமிழ் மென்பொருள்களை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 15 தமிழ் மென்பொருட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. அவற்றில். ‘‘தமிழிணையம் ஒருங்குறி மாற்றி’’ மற்றும் ‘‘தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக்கள்’’ ஆகிய 2 தமிழ் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழிணையம் ஒருங்குறி மாற்றியின் (தமிழ் யூனிகோட் கன்வெர்டர்) பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், முதற்கட்டமாக 10 புதிய (பான்ட்) தமிழிணையம் ஒருங்குறி எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்திலிருந்து (http://www.tamilvu.org/tkbd/index.html) இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

உள்ளங்கையில் சான்றிதழ்

அரசு இ–சேவை மையங்களின் சேவைகளை இன்னும் எளிமையான முறையில் பெறுவதற்கு, அனைத்து இ–சேவை மையங்களிலும் 2.5.2017 முதல் அரசு சேவை பெற விரும்பும் விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பதாரர் அவர்கள் கேட்கும் சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக டைனி யூ.ஆர்.எல். அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் ஸ்மார்ட் செல்போன் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ என்ற திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இணைய வழியாக தொடங்கி வைத்தார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement