Ad Code

Responsive Advertisement

'காஸ்ட்லி'யாகும் பொருட்கள் என்னவென்று தெரியுமா?

'காஸ்ட்லி'யாகும் பொருட்கள் என்னவென்று தெரியுமா?
ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரியில் இருந்து, மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 1200 வகை பொருட்களில் 7 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 14 சதவீத பொருட்களுக்கு மிகக்குறைவாக 5சதவீத வரியும், 17சதவீத பொருட்களுக்கு 12 சதவீத வரியும், 43 சதவீத பொருட்களுக்கு 18 சதவீத வரியும், 19 சதவீத பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், 81 சதவீத பொருட்கள் 18 சதவீதம் வரிக்குள்ளாகவே கொண்டு வரப்பட்டுள்ளன.
வரி விலக்கு பெறும் பொருட்கள்....
பால், தயிர், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரிசி, கோதுமைக்கு சிலமாநிலங்களில வாட் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில்இனி வரி இருக்காது. இதனால், ஜுலை மாதத்துக்கு பின், இவற்றின் விலை கடுமையாக குறையும்.
5 சதவீதம் வரிக்குள்.....
காபி, டீத்தூள், சர்க்கரைக்கு மிகக்குறைவாக 5 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கு மிகக் குறைவாக 5 சதவீதம் வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஸ்வீட்ஸ்களுக்கு வரிட
இனிப்பு வகைகளுக்கு, சாக்லேட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
18சதவீதம் வரி
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாக தலைக்கு தேய்க்கும் எண்ணெய், சோப், டூத்பேஸ்ட் ஆகியவற்றுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பொருட்களுக்கு வரி 22 முதல் 24 சதவீத வரி மத்திய, மாநில அரசுகளால் கூட்டாக விதிக்கப்பட்டு வருகிறது.
28சதவீதம் வரி
நுகர்வோர் பொருட்களான ஏ.சி. பிரிட்ஜ் ஆகியவை 28 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது இவற்றுக்கு 31 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
குளிர்பானங்கள்
குளிர்பானங்கள், கார்கள் 28 சதவீதம் வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கார்ளுக்குகூடுதல் வரி
காருக்கு 28சதவீத ஜி.எஸ்.டி. வரியோடு சேர்த்து, ஒரு சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர கார்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரியும், சொகுசு கார்களுக்கு கூடுதல் வரியாக 15 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement