Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு

அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, ௩ சதவீத இட ஒதுக்கீட்டை, ௪ சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், 1981ல் இருந்தே, மாற்று திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பில், ௩ சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவற்றில், பார்வை குறைபாடு உடையவர், செவித்திறன் குறைபாடு உள்ளவர், கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு, தலா, 1 சதவீதம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் - 2016ன் படி, அரசு பணியிடங்களில், 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், ௩ சதவீத ஒதுக்கீட்டை, ௪ சதவீதமாக, தமிழக அரசு பணிகளில் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த ஒதுக்கீட்டில், பார்வை குறைவுடையோருக்கு, 1 சதவீதம்; செவித்திறன் குறைபாடு உள்ளவர், 1 சதவீதம் வழங்கப்படும். கை, கால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு, 1 சதவீதம் வழங்கப்படும்.

புற உலகு சிந்தனையற்றவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்டோருக்கு, 1 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த 4 சதவீதம் இட ஒதுக்கீடானது, அனைத்து அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனம், வாரியம், உள்ளாட்சி அமைப்பு, கல்வி நிறுவனம், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு பொருந்தும். 
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement