Ad Code

Responsive Advertisement

38 மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு 'ஹால் டிக்கெட்'

சென்னை, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில் இருந்து, 38 மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

ஆன்லைனில் ஏற்பட்ட பிரச்னையால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
எனவே, தாங்கள் செலுத்தும் கட்டணத்தை ஏற்று, 'நீட்' தேர்வு எழுத அனுமதிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 38 மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.இதை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்திய
நாராயணா பிறப்பித்த உத்தரவுஇதே போன்ற ஒரு வழக்கில், தேர்வு கட்டணம் பெறுவதை பரிசீலிக்கும்படி, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 'அந்த உத்தரவு செல்லும்' என, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

விண்ணப்ப படிவம் பூர்த்தியாகும் வகையில், கட்டணத்தை ஏற்பதை
பரிசீலிக்க வேண்டும்.எனவே, ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட, விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை ஏற்கும்படி, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடப்படுகிறது. கட்டணத்தை பெற்று, 'நீட்' தேர்வு எழுத ஏதுவாக, ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி
உத்தரவிட்டு உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement