Ad Code

Responsive Advertisement

இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்- Article by Chandru A


இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித்  தேர்வுக்கு  தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்குகாத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்.

தமிழகஅரசு உதவி பெறும் பள்ளிகளில்பணியில் உள்ளபட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறியாவதைத் தடுக்கபல்வேறு ஆசிரியர் சங்கங்கள் உதவினாலும்

  TNTET கடைசி வாய்ப்பு எனகடந்த வாரம் வந்த கல்வித் துறையின் இயக்குனர் சுற்றறிக்கையால் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பணியில் உள்ளபட்டதாரி ஆசிரியர்களின் பணியும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 23/08/2010ற்குப் பிறகு பணிநியமனம் பெற்றவர்கள் நிலை இது.மிக மனம் வருந்தும் நிலை இதில் யாதெனில் ஆறு  வருடங்களுக்கு மேலாக பணியில்ஜொலித்த இவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்பட்டுகட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பு எவ்வாறுசெயல்படுத்தப்படும் என்பதே!23/08/2010 க்குப் பிறகு (தெரிந்தோ தெரியாமலோ முழு தகுதி இருந்தும்) பணியில்சேர்ந்த ஒரே காரணத்தினால் இவர்கள் தகுதியற்றவர்கள் என எப்படி வரும் காலம்நிரூபிக்க உள்ளது என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.இவர்களில்பணியில் சேர்ந்த நாள்முதல்  இன்று வரை மாணாக்கர்களின் படிப்பு,நலன்,  அக்கறை,  முன்னேற்றம்,  தேர்ச்சி, ஒழுக்கம்,  அணுகுமுறை....போன்றவைகளில் எத்தனை ஆசிரியர்கள் மீது தவறு குற்றம் கண்டறியப்பட்டுள்ளது..?

"அ முதல் ஃ வரை...!கற்பித்தலுடன் சேர்த்துஅரசு அவ்வப்போது கொடுக்கும் பணியிடைப் பயிற்சிகள் முலம் மாணாக்கர்களுக்குதேவையானவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் சுணக்கம் இன்றியும் போதிக்கவில்லை" எனநிரூபிக்க யாரால் இயலும்?கல்வி மற்றும் பள்ளி சார்ந்த  அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து தேர்ச்சிசதவீதமும் உயர்த்தி கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக பணியில் உள்ள இந்த ஆசிரியர்கள்அடுத்த வரும்  ஆசிரியர் தகுதித்தேர்வை காரணம் காட்டி தகுதியற்ற ஆசிரியர்கள் எனமுத்திரை குத்தி வெளியேற்றிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் எனயோசிக்கவும், மன இறுக்க சூழலையும் இன்று வரை காது கொடுத்து கேட்க யாரும் இல்லை.கடந்த 3 ½ ஆண்டுகளிலா பலசட்ட சிக்கல்கள் விளைவாக ஆசிரியர் தகுதித் தேர்வுநடைபெறவில்லை.

இனி நடக்கும் TNTETல் முழுவதும் பயின்று வெற்றி பெற சாத்தியமான சூழலும்,தெளிவான மனநிலையும் மங்கிய நிலைக்கு தற்போதைய கட்டாயத் தேர்ச்சி பெற்றாகவேண்டும் என்ற சுற்றறிக்கை மேலும் காயப்படுத்தியுள்ளது.இந்த ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு காரணமாக TNTET லிருந்து முழுவதும் விலக்குகேட்டு கோரிக்கைகளை அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் வாயிலாக வைத்து வந்தநிலையில் 3/10 வாய்ப்புகள் மட்டுமே கொடுத்து விட்டு தற்போது வரும்TNTET கடைசிவாய்ப்பு என்ற கட்டாயத்தால்  கழுத்தில் கத்தி உள்ளது போல தினம் தினம்இறுக்கமான சூழலில்    மிகவும்வேதனையில்  அரசு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள்திருத்தம், தேர்தல் பணி இவற்றையும் சேர்த்து  பள்ளிக் கல்விப் பணியும்புரிந்து வருகின்றனர்.

இவர்களின் நிலை பற்றிய செய்திகள் அவ்வப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள், மின்ஊடகங்கள் வழியாக வந்தாலும் அதை அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகளின்கவனத்தில்கொண்டு செல்லவும், எவரும் கண்டுகொள்வதும் இல்லை என்பதுடன், ஆறுதல் கூறக் கூடஆட்கள் இல்லை என்பது இவர்களின சொல்ல இயலாத துயரம்.இவ்வளவு காலம் பட்டதாரி ஆசிரியர்களாக சிறப்பாக பணி புரிந்தும் முறையானஅங்கீகாரம் இல்லாதது போல இன்று வரை பயணிக்கும் இந்த ஆசிரியர்கள் பல வழிகளில்அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு உதவ பல அரசு உதவி  பள்ளிநிர்வாகங்கள் முன் வருவது இல்லை.TNTET நிபந்தனை ஆசிரியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரம், பணிப் பாதுகாப்புகாரணமாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஏற்கெனவே  சிறுபான்மையினர் பள்ளிகள்ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல இவர்களுக்கும் விலக்கு அளித்து, ஒருநல்ல முடிவினை தற்போது தமிழக அரசு எடுக்கும் பட்சத்தில் அரசிற்கு முழுவதும்நன்றிக்கடன் பற்று இருப்பார்கள் என்பது உண்மை.இந்த பட்டதாரி ஆசிரியர்கள் நிலையை நல்உள்ளத்துடன் பார்க்க முற்பட்டு விரைவில்தீர்வு கண்டால் இனிவரும் நாட்களிலாவது நிம்மதியுடன் ஆசிரியப் பணியை அறப்பணியாகமகிழ்ச்சியுடன் செய்வார்கள்.

தமிழக அரசின் கீழ் உள்ள தமிழக TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்பில்  தமிழகஅரசுக்கு மிகவும் நன்றி....!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement