Ad Code

Responsive Advertisement

முக்கியச் செய்தி-2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும்
பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அக்.,23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.


தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரியல் எஸ்டேட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறுகையில், 8 மாதமாக தடை நீடிப்பதால் வாங்கிய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை தெரிவிக்கப்பட்டது.
வழக்கை தொடர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், அனுமதியில்லாத மனைகளை பத்திர பதிவு செய்யவே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

மீறக்கூடாது:
இதனை தொடர்ந்து நீதிபதிகள், கடந்த 2016 அக்., 23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்யலாம். சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக்கூடாது. விளை நிலங்கள் விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறினர்.

ஒத்திவைப்பு:
தொடர்ந்து நிலங்களை வரைமுறைப்படுத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கை ஏப்ரல் 7 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement