Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID)பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றவும்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID)பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றவும் தேவைப்படும் ஆவணங்கள்:
கீழ்க்கண்ட ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ளவும்,
1. புகைப்படம் (Profile Photo) – 15KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload) செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png. புகைப்படத்தின் அளவை குறைத்துகொள்ள http://compressjpeg.com/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.

2. கையெழத்து படம் (Signature / Thumb / Other Print )
3KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload) செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png.

3. குடியிருப்புக்கான சான்றிதழ் ( ஆதார் அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை ) 10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

4. சாதி சான்றிதழ் (SC, ST, OBC – BC, MBC )
10KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

5. மாற்றத்திறனாளிக்கான சான்றிதழ் ( தமிழக அரசால் வழங்கப்பட்டது )
10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்
Compress Tools

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை கொண்டு உங்களது Image மற்றும் PDFயை Compress செய்து கொள்ள முடியும்.

Image compress – http://compressjpeg.com/

PDF compress – https://online2pdf.com/pdf-reduce-size

Scan App Tools

உங்களது ஆவணங்களை Mobile மூலம் Scan செய்ய கீழ்க்காணும் Appயை பயன்படுத்தலாம்

Android Mobile : Office Lens https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens&hl=en
Apple Mobile : Office Lens https://itunes.apple.com/in/app/office-lens/id975925059?mt=8

Step 1:
http://www.swavlambancard.gov.in/pwd/application – என்ற இணையதள முகவரியை தேர்வு செய்யவும்

Step 2 : தமிழ் மொழியை தேர்வுசெய்யவும்

Step 3: Personal Details
Personal Details-ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கீழே குறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

1. விண்ணப்பதாரர் முதல் பெயர் (Applicant First Name *) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

2. விண்ணப்பதாரர் தந்தை பெயர் (Applicant Father’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

3. விண்ணப்பதாரர் தாயின் பெயர் (Applicant Mother’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

4. பிறந்த தேதி (Date of Birth ).

5. இணம்(Gender).

6. வகுப்பு (சாதி – Category) – சாதி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் ( image size 10 KB to 800 KB allowed ).

7. புகைப்படம் ( image with size 15 KB to 500 KB ).

8. கையொப்ப புகைப்படம் (image with size 3 KB to 500 KB allowed).

9. முகவரி 1 (Address Line 1 * ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

0. மாநிலம்.

1. மாவட்டம்.

2. மாநகராட்சி.

குறிப்பு : தொடர்புகொள்ள வேண்டிய முகவரியும் நிரந்தர முகவரியும் ஒரே முகவரி என்றால் Same as above என்தை தேர்வு செய்யவும்.

Step 4 : Disability Details

Disability Details – ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கீழே குறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

1. Sr. No. / Registration No. of Certificate *

2. Date of Issuance of Certificate *

3. Details of Issuing Authority *

4. Disability Percentage (%)

5. Disability Type *

Step 5 : Employment Details

Employment Details- ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.

Step 6: Identity Details

1. Identity Proof ( ஆதார் அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதற்க்கான சான்றிதழை பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்)

2. Enter the code from the image (Case Insensitive)* – (அருகில் உள்ள புகைப்படத்தில் உள்ள எழத்துகளை சரியாக பதிவு செய்ய வேண்டும்)

3. I have read and agree to the Terms and Conditions.* (இருதியாக அருகில் உள்ள சிறிய சதுர பெட்டியை தேர்வு செய்யவும்)

Step 7: Person with Disability Application Preview
இந்த பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் தகவல்களை சரிசெய்ய வேண்டும் என்றால் தேர்வு செய்ய வேண்டும்

Step 8: Confirmation

இறுதியாக தங்களது அனைத்து தகவல்களும் இந்திய அரசால் உறுதி செய்யப்பட்ட பின்பு இந்திய அரசின் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்களது விண்ணப்பத்தையும (Application ) அதற்க்கான ரசீதையும்(Receipt) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

உங்களது email-க்கு அனுப்பபட்டிருக்கம் பதிவு எண்ணை (Enrolment Number) கொண்டு உங்களது தேசிய அடையாள அட்டையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். – Track Application Status – http://www.swavlambancard.gov.in/pwd/pwdtrack
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் தங்களது புரிதலுக்காக மட்டுமே.. மேலும் தெரிந்துக்கொள்ள http://www.swavlambancard.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement