Ad Code

Responsive Advertisement

TNTET 2017- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் TÈT தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக சுமார் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்கள் மார்ச் 6 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாவட்டங்களில் உள்ள அரசினர் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து,  உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பம் மார்ச் 23 தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேரும் கடைசி தேதியாகும். ஒரு விண்ணப்பத்தின் விலை 50 ரூபாய் ஆகும். இந்த விண்ணப்பங்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விநியோகிக்கப்படும். என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement