Ad Code

Responsive Advertisement

TNPSC உறுப்பினர் கூடாரம் காலி போட்டி தேர்வுகள் அறிவிப்பதில் சிக்கல்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், உறுப்பினர்கள் கூடாரம், ஒட்டுமொத்தமாக காலியாகி விட்டதால், போட்டி தேர்வுகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., அமைப்பானது, தலைவர் மற்றும், 14 உறுப்பினர்களை கொண்டது.

கல்வி, சட்டம், பொருளாதாரம் உட்பட, பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, அருள்மொழி நியமிக்கப்பட்டார். பின், 11 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்பட்டது. விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, 11 உறுப்பினர்கள் நியமனத்தை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக, குப்புசாமி, பன்னீர்செல்வம் என்ற இருவர் மட்டுமே, உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களின் பதவிக்காலமும் நேற்று முடிந்தது. தற்போது, டி.என்.பி.எஸ்.சி.,யில், ஒரு உறுப்பினர் கூட இல்லை.

தற்போது, தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் மட்டுமே, தேர்வாணைய செயல்பாடுகளை நிர்வகித்து வருகின்றனர்.
உறுப்பினர்கள் இல்லாத தால், டி.என்.பி.எஸ்.சி., யில் ஆணைய கூட்டத்தை கூட்டி, புதிய தேர்வுகளை அறிவிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement