Ad Code

Responsive Advertisement

TET தொடர்பான TRB கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என தேர்வுத்துறை அறிவுறுத்தியதால் சி.இ.ஓ.,க்கள் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) கூட்டத்தில் பங்கேற்க, சென்னை சென்ற தென் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அக்கூட்டத்தில் பங்கேற்காமல் உடனடியாக விமானம் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்குநேற்று திரும்பினர்.
இதற்கு, கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்குள் நிலவும் 'ஈகோ' பிரச்னை தான் காரணம் என, அத்துறையில் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்.,29 மற்றும் 30ல் நடத்த டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. இதற்காக பிப்.,20 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தேர்வு குறித்து, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் பிப்.,3ல் நடத்தப்படும் என டி.ஆர்.பி., உத்தரவிட்டது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியுள்ளதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என தேர்வுத்துறை அறிவுறுத்தியதால் சி.இ.ஓ.,க்கள் உச்சகட்ட குழப்பம் அடைந்தனர்.இதற்கிடையே 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தலாம் என்ற முடிவை, கடைசி நேரத்தில் டி.ஆர்.பி., கைவிட்டதால், துாத்துக்குடி தவிர (செய்முறை தேர்வுகள் துவங்காத மாவட்ட அதிகாரிகள்) தென் மாவட்டங்களை சேர்ந்த ஏழு சி.இ.ஓ.,க்கள் நேற்று முன்தினம் இரவு, ரயில் மூலம் சென்னைசென்றனர்.

சென்னையில் நேற்று காலை இவர்கள் இறங்கிய தகவல், தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகாரி ஒருவர் அவர்களை தொடர்புகொண்டு, "உங்களை யார் சென்னை வர சொன்னது? செய்முறை தேர்வுநடப்பதால் மாவட்டத்தை விட்டு வெளியேற கூடாது என அறிவுறுத்தியும் ஏன்வந்தீர்கள். உடனடியாக மாவட்டங்களுக்கு திரும்பி சென்று, 'ரிப்போர்ட்' செய்யுங்கள்," என உத்தரவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தென்மாவட்ட சி.இ.ஓ.,க்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பினர். இதேநிலை வட மாவட்ட கல்வி அதிகாரிகள் சிலருக்கும் ஏற்பட்டது. அவர்கள் ஆம்னி பஸ், ரயில்கள் மூலம்மதியத்திற்குள் திரும்பி சென்று தேர்வுத்துறைக்கு 'ரிப்போர்ட்' செய்தனர்.அதிகாரிகள் கூறியதாவது:கல்வித்துறை மற்றும் டி.ஆர்.பி.,யில் உள்ள அதிகாரிகள் இருவருக்குள் நிலவும் 'ஈகோ' பிரச்னையால், டி.ஆர்.பி., அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்கேற்பதா கூடாதா என்ற குழப்பம்நீடித்தது. கடைசியில் அனுமதி கிடைக்கவில்லை.

இத்துறையில் பல பிரிவுகளில் 'சீனியர்' ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அதை பின்பற்றுவதா, வேண்டாமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இதனால் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறோம். கல்வி அமைச்சர் பாண்டியராஜன் இப்பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement